ரேயான் நூலுக்கு ஜி.எஸ்.டி. குறைப்பு: லகு உத்யோக் பாரதி வரவேற்பு
சோமனூர்: ரேயான் நூலுக்கான ஜி.எஸ்.டி., 12 சதவீதத்தில் இருந்து, ஐந்து சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதற்கு, லகு உத்யோக் பாரதி அமைப்பு வரவேற்றுள்ளது. இதுகுறித்து லகு உத்யோக் பாரதி மாநில செயலாளர் நாராயணசாமி கூறியதாவது: ஜவுளித்துறையில் காட்டன் நூல் காட்டன் துணிக்கு ஐந்து சதவீதம் ஜி.எஸ்.டி., உள்ளது. ஆனால், ரே யான் நூலுக்கு, 12 சதவீதமும், ரேயான் துணிக்கு, ஐந்து சதவீதமும் ஜி.எஸ்.டி., இருந்தது. இதனால், ஜவுளித்துறை யினர் பாதிக்கப்பட்டனர். ரேயான் நூலுக்கான, 12 சதவீத ஜி.எஸ்.டி.,யை, ஐந்து சதவீதமாக குறைக்க வேண்டும், என, எங்களது அமைப்பு சார்பில், ஜி.எஸ்.டி., கவுன்சில் மற்றும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தோம். அதன் தொடர்ச்சியாக, ரேயான் நூலுக்கான, ஜி.எஸ்.டி.,யை, 12 ல் இருந்து ஐந்து சதவீதமாக குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் அமைப்பின் பரிந்துரையை ஏற்று, ஜி.எஸ்.டி.,யை குறைத்த, ஜி.எஸ்.டி., கவுன்சில் மற்றும் மத்திய அரசுக்கு, எங்கள் அமைப்பு மற்றும் சோமனூர் ஜவுளி அமைப்புகளின் சார்பில் நன்றி தெரிவிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.