உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது குண்டாஸ்

பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது குண்டாஸ்

கோவை; சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த நபர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப் பட்டது. கோவை, கருமத்தம்பட்டி, சூலுார் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வாலிபர் ஒருவர் பள்ளியில் படிக்கும் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். விசாரணையில், கோவையைச் சேர்ந்த வசந்தகுமார், 22 என்பவரை போக்சோ வழக்கில் சிறையில் அடைத்தனர். இவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, எஸ்.பி., கார்த்திகேயன் பரிந்துரைத்தார். அதற்கான உத்தரவை கலெக்டர் வழங்கினார். இது சிறையில் அடைக்கப்பட்டுள்ள வசந்தகுமாரிடம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ