உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நால்வருக்கு குண்டாஸ் ; போலீசார் நடவடிக்கை

நால்வருக்கு குண்டாஸ் ; போலீசார் நடவடிக்கை

கோவை; கோவை செட்டிபாளையம் பகுதியில், கடந்த மாதம் விற்பனைக்காக, 25 கிலோ கஞ்சா வைத்திருந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கன்டல ராமலட்சுமணன், 20, மண்டல வீரபாபு, 21 ஆகிய இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர். கோவை, பொள்ளாச்சி மகளிர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில், 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த கவியரசன், 21 என்பவர் சிறையில் அடைக்கப்பட்டார். அதேபோல், பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன் அருகே, 5 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த, மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த மதியார் ரஹ்மான் மொல்லா, 26 என்பவர் சிறையில் அடைக்கப்பட்டார். இவர்கள் நான்கு பேர் மீதும், குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன் பரிந்துரைத்தார். கோவை கலெக்டர் பவன்குமார், அதற்கான உத்தரவை வழங்கினார். சிறையில் உள்ள நான்கு பேருக்கும் இவ்வுத்தரவு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி