உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அடங்காத இருவர் மீது பாய்ந்தது குண்டாஸ்

அடங்காத இருவர் மீது பாய்ந்தது குண்டாஸ்

கோவை; கோவை மாநகரில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இருவர், குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். சுகுணாபுரத்தை சேர்ந்த பீர் முகமது, 42 என்பவர் மீது வழிப்பறி, அடிதடி போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கடந்த, 22ம் தேதி வழிப்பறி வழக்கில் குனியமுத்தூர் போலீசார் பீர் முகமதை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இதேபோல், புலியகுளம், அம்மன் குளம் பகுதியை சேர்ந்த சக்திவேல், 22 என்பவர் அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, வழிப்பறி என தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவணா சுந்தர், இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ