உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கால காலேஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி, லட்சார்ச்சனை

கால காலேஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி, லட்சார்ச்சனை

கோவில்பாளையம்: கோவில்பாளையம், காலகாலேஸ்வரர் கோவிலில், இன்று (11ம் தேதி) குரு பெயர்ச்சி விழாவும், நாளை லட்சார்ச்சனையும் நடக்கிறது.கொங்கு நாட்டு திருக்கடையூர் என்று அழைக்கப்படும், 1,300 ஆண்டுகள் பழமையான, கோவில்பாளையம் கால காலேஸ்வரர் கோவிலில், இன்று (11ம் தேதி) காலை 11:00 மணிக்கு, குருபெயர்ச்சி விழா, சிறப்பு யாக பூஜையுடன் துவங்குகிறது. பிற்பகல் 1:19 மணிக்கு, குரு பெயர்ச்சி நடைபெறுகிறது. தட்சிணாமூர்த்திக்கு, சிறப்பு அபிஷேகம், கலசாபிஷேகம், மகா தீபாராதனை நடக்கிறது.நாளை காலை 9:00 மணிக்கு, லட்சார்ச்சனை விழா துவங்குகிறது. மதியம் 1:00 மணி வரையும், பின்னர், மாலை 4:00 மணி முதல், இரவு 7:00 மணி வரையும், லட்சார்ச்சனை நடைபெறுகிறது.'விழாவில் பங்கேற்று, பிரசாதம் பெற 99440 67896 என்னும் எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம்' என அறங்காவலர் குழு தலைவர் நாகராஜ், செயல் அலுவலர் தேவி பிரியா மற்றும் அறங்காவலர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை