உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சச்சிதானந்த பன்னாட்டு பள்ளியில் குருபூஜை

சச்சிதானந்த பன்னாட்டு பள்ளியில் குருபூஜை

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறில் உள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில், நிறுவனர் சச்சிதானந்த சுவாமியின் முக்தி நாளான நேற்று, 23ம் ஆண்டு குருபூஜை நடைபெற்றது. பள்ளியில் பூஜையின் துவக்கத்தில் திருவிளக்கு வழிபாடு நடந்தது. இதில் பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 வகுப்பு மாணவிகளும், ஆசிரியைகளும் பங்கேற்றனர். திருவிளக்கு வழிபாட்டினை பேரூராதீனம் கவுமாரச் செல்வி மரகதம் நடத்தினார். குரு வணக்க பாடலை மாணவ மாணவியர் பாடினர். விளக்கு பூஜை நிறைவில் சச்சிதானந்தர் போட்டோவுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த குருபூஜைக்கு பள்ளி நிர்வாக அறங்காவலர் ராமசாமி தலைமை வகித்தார். பள்ளி செயலர் கவிதாசன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் உமா மகேஸ்வரி வரவேற்றார். துணை முதல்வர் சக்திவேல், ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவியர், பணியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி சச்சிதானந்தர் வழிபாட்டு மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் சிவக்குமார் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை