மேலும் செய்திகள்
பள்ளி, கல்லுாரியில் பொங்கல் விழா..
14-Jan-2025
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஜமீன்ஊத்துக்குளி நாச்சியார் தி வேல்டு பள்ளியில், பொதுத்தேர்வை எதிர்கொள்ளும், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குருகுல வாழ்த்து விழா நடத்தப்பட்டது.சிறப்பு விருந்தினராக குழந்தைகள் நல டாக்டர் உத்தரராஜ், மகப்பேறு டாக்டர் கண்ணணி ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி நிறுவனர் சின்னசாமி மற்றும் அவரது மனைவி மனோரமா, பள்ளி ஆலோசகர் குருமூர்த்தி, தாளாளர் மணி, முதல்வர் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தொடர்ந்து, கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வில், மாவட்ட அளவில் இரண்டாமிடம், கல்வி மாவட்டம் முதலிடம், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவியருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
14-Jan-2025