ராம்நகர் ராமர் கோவிலில் குருபெயர்ச்சி மஹாயக்ஞம்
கோவை: ராம்நகர் கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானத்தில், நேற்று நடந்த குருபெயர்ச்சி மஹா யக்ஞத்தில் திரளான பக்தர்கள், சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். குருபெயர்ச்சியான நேற்று, ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பகல் 1:19 மணிக்கு பிரவேசித்தார். இதையொட்டி, கோவில் வளாகத்தில் உள்ள நவக்கிரஹ சன்னிதியில் நவக்கிரஹ சாந்தியும், பரிகார யக்ஞமும், அபிஷேக ஆராதனைகளும் நடந்தன.மஹாதீபாராதனை, பிரசாத வினியோகம் நடந்தது. மேஷம், மிதுனம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ராசிக்காரர்கள் பரிஹாரம் செய்து கொண்டனர்.