உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு

கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு

மேட்டுப்பாளையம்; காரமடை அருகே கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பில் கல்லூரி மாணவ, மாணவிகள் அசத்தினார்கள். காரமடை, டாக்டர்.ஆர்.வி. கலை, அறிவியல் கல்லூரியில், தேசிய கைத்தறி தினம் ஆகஸ்ட் 7ம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு உள்தர மதிப்பீட்டு அமைப்பு, நுண்கலை மன்றம் மற்றும் கோவை மக்கள் சேவை மையம் சார்பில் கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ரூபா இதற்கு தலைமையேற்றார். கல்லூரி மாணவ, மாணவிகள் தமிழ்நாடு, பெங்காலி, மராத்தி, பஞ்சாபி, கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலத்தில் வாழும் மக்களின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் வெளிப்படுத்தும் வகையில் கைத்தறி ஆடை அணிந்து வந்து அணி வகுப்பு நடத்தினர். இந்நிகழ்வு அனைவருக்கும் கைத்தறி ஆடையை அணிவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் என மாணவர்கள் கூறினர்.----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ