உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ஜெ., பிறந்தநாள் கொண்டாட்டம் ஜே ஜே!

 ஜெ., பிறந்தநாள் கொண்டாட்டம் ஜே ஜே!

கோவை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் விழாவை, அ.தி.மு.க.,வினர் உற்சாகமாகக் கொண்டாடினர். கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், ஹுசூர் ரோட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து கட்சியினர், மேள தாளம் முழங்கஊர்வலமாகச் சென்றனர். அவிநாசி ரோட்டில் உள்ள அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, கட்சி அலுவலகத்தில் ஜெ., உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்கினர். மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. எம்.எல்.ஏ.,க்கள் அம்மன் அர்ச்சுணன், ஜெயராம், முன்னாள் மேயர் செ.ம.வேலுசாமி, மாநில மாணவரணி செயலாளர் ராமச்சந்திரன் உட்பட கிளைக்கழக, பகுதிக் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர். கிளைக்கழகங்களில், ஆங்காங்கு ஜெ., உருவப்படம் வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. எம்.ஜி.ஆர்., திரைப்படப்பாடல்கள் ஒலிக்க விடப்பட்டன. பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ