திருநெல்வேலி ரயில் சேவை நீட்டிப்பால் மகிழ்ச்சி
கிணத்துக்கடவு; மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி ரயில் சேவை இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், பயணியர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேட்டுப்பாளையம் --- திருநெல்வேலி ரயில் (06030 / 06029) சேவை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை வழியாக வாரம் ஒரு முறை (திங்கள்) இயக்கப்படுகிறது. இதனால், இப்பகுதியில் உள்ள மக்கள் பயனடைந்தனர். இந்த சேவை இம்மாதம் இறுதியில் நிறைவடையும் நிலையில், பயணியர் நலன் கருதி ரயில்வே நிர்வாகம் சார்பில் இந்த ரயில் சேவை, டிச. 1ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால், ரயில் பயணியர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், தாம்பரம் --- போத்தனூர் (06185 / 06186) இடையேயான ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என, ரயில் நிர்வாகத்துக்கு பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.