மேலும் செய்திகள்
இடியுடன் பெய்த கனமழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு
03-Oct-2024
வால்பாறை: வால்பாறையில் கடந்த நான்கு மாதங்களாக பெய்த தென்மேற்கு பருவமழையினால், பி.ஏ.பி., பாசன திட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பின. இந்நிலையில், தென்மேற்கு பருவமழை விடைபெற்ற நிலையில், வடகிழக்குப் பருவமழை பரவலாக பெய்கிறது.வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் இடியுடன் கனமழை பெய்வதால், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால், பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை,158.21 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 491 கனஅடி தண்ணீர் வரத்தாக இருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு, 4,202 கனஅடி தண்ணீர் வீதம் பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால், அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 70.20 அடியாக உயர்ந்தது.நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,) வருமாறு:வால்பாறை - 32, சோலையாறு - 43, பரம்பிக்குளம் - 37, ஆழியாறு - 7, மேல்நீராறு - 30, கீழ்நிராறு - 9, காடம்பாறை - 37, மேல்ஆழியாறு - 19, சர்க்கார்பதி - 17, துணக்கடவு - 19, வேட்டைக்காரன்புதுார் - 12, மணக்கடவு - 16, துணக்கடவு - 5, பெருவாரிப்பள்ளம் - 18, பொள்ளாச்சி - 5 என்ற அளவில் மழை பெய்தது.
03-Oct-2024