மேலும் செய்திகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
05-Jul-2025
அன்னுார், குப்பனுார், கருப்பராயன் கலாமணி சுவாமி திருக்கோவிலில், 11ம் ஆண்டு திருக்கல்யாணம் மற்றும் திருத்தேர் உற்சவத் திருவிழா நடக்கிறது. மாலை, 5:00 மணி முதல், வாஸ்து சாந்தி, விநாயகர் வழிபாடு, அபிஷேகப் பூஜை, கரகம் எடுத்தல், அன்னதானம், வள்ளிக்கும்மி நடனம் நடக்கிறது. கம்பராமாயண சொற்பொழிவு
ராம்நகர், ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம் சார்பில், ஆடி உற்சவத்தை முன்னிட்டு கம்பராமாயணம் தொடர் சொற்பொழிவு நடக்கிறது. மாலை, 6:30 முதல் நடக்கும் நிகழ்வில், திருச்சி கல்யாணராமன் சிறப்பு சொற்பொழிவாற்றுகிறார். சாதுர்மாஸ்ய விரத மகோற்சவம்
ராம்நகர், ஸ்ரீ கோதண்டராமர் கோவிலில், வேத வியாச பூஜை மற்றும் சாதுர்மாஸ்ய விரத மகோற்சவம் காலை, 9:30 மணி முதல் நடக்கிறது. ஆஸ்தான வித்வான் முடிகொண்டான் ரமேஷ் மற்றும் குழுவினர் வீணை கச்சேரியும் நடக்கிறது. குடிநோய் விழிப்புணர்வு முகாம்
ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.,நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது. குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது. பகவத்கீதை சத்சங்கம்
ரேஸ்கோர்ஸ், நாராயண் டவர்சில், பகவத்கீதை சத்சங்கம் மாலை, 5:30 முதல் இரவு, 7:00 மணி வரை நடக்கிறது. சுவாமி ஜகத்மானந்த சரஸ்வதி சத்சங்கத்தை நிகழ்த்துகிறார். பட்டமளிப்பு விழா
நரசீபுரம், வெள்ளிமலைப்பட்டினம், கோவை கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 25ம் ஆண்டு பட்டமளிப்பு விழா, காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. சரவணம்பட்டி, கே.ஜி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 16வது பட்டமளிப்பு விழா, காலை, 9:30 மணிக்கு நடக்கிறது. கோவை புத்தகத் திருவிழா
மாவட்ட நிர்வாகம், பள்ளிக் கல்வித் துறை மற்றும் கொடிசியா இணைந்து, கோவை புத்தகத் திருவிழாவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடத்துகின்றன. காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை கண்காட்சியை பார்வையிட்டு புத்தகங்களை வாங்கலாம். மாவட்ட விளையாட்டு விழா
தியாகி என்.ஜி., ராமசாமி நினைவு விளையாட்டுக் கழகம் சார்பில், 29ம் ஆண்டு தியாகி என்.ஜி.,ராமசாமி நினைவு சுழற்கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி நடக்கிறது. வரதராஜபுரம், தியாகி என்.ஜி.ஆர்., பள்ளி வளாகத்தில் போட்டிகள் காலை, 7:00 மணிக்கு நடக்கிறது.
05-Jul-2025