உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஸ்ரீ சத்யசாய் சேவா நிறுவனங்கள் சார்பில் ஹயக்கிரீவர் ஹோமம் 

ஸ்ரீ சத்யசாய் சேவா நிறுவனங்கள் சார்பில் ஹயக்கிரீவர் ஹோமம் 

கோவை; ஸ்ரீ சத்யசாய் சேவா நிறுவனங்கள், தமிழ்நாடு தெற்கு சார்பில், கோவை ரேஸ்கோர்ஸிலுள்ள ஸ்ரீ சத்யசாய் மந்திரில், லட்சுமி ஹயக்கிரீவர் ஹோமங்களும், சிறப்பு பூஜா வைபவங்களும் பக்தர்கள் சூழ நடைபெற்றன.நடைபெற உள்ள அரசு பொதுத்தேர்வில், எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவியர், சிறப்பாக தேர்வு எழுதி நல்ல மதிப்பெண்களை பெறுவதற்காகவும், முழுமையான ஆரோக்கியத்துடன் நல்ல முறையில் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இந்த ேஹாமம் நடந்தது.திரளான பள்ளி மாணவ, மாணவியர் பள்ளி சீருடையில் பங்கேற்று, சங்கல்பம் செய்து கொண்டனர். ஸ்ரீ சத்யசாய் சேவா நிறுவனத்தினர் மாணவ மாணவியரை ஒருங்கிணைத்து, அனைவரையும் சாயி நாமம் ஜெபிக்க செய்தனர்.பின்னர், மாணவ மாணவியர் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். அனைவருக்கும் பூஜிக்கப்பட்ட பேனா, பென்சில் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ