மேலும் செய்திகள்
காக்க... காக்க... இதயம் காக்க!
29-Sep-2024
பொள்ளாச்சி : பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், உலக இருதய தின விழா நடந்தது. இருப்பிட மருத்துவ அலுவலர் டாக்டர் மாரிமுத்து, பொது மருத்துவத் துறை தலைவர் டாக்டர் வனஜா ஆகியோர் தலைமை வகித்தனர். செவிலியர் கண்காணிப்பாளர்கள் தனலட்சுமி மற்றும் கவுரி பங்கேற்றனர்.மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா பேசியதாவது:தற்போது தொற்றும் நோய்கள் குறைந்து, தொற்ற நோய்கள் அதிகரித்துள்ளது. உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், சர்க்கரை நோய், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் உணவு முறை மாற்றத்தினாலும், உடல் உழைப்பு இல்லாத காரணத்தினாலும், டென்ஷன் ஆன வேலைகள் அதிகம் செய்வதாலும், உடலுறக்கம் தேவையான அளவு இல்லாததாலும் அதிகமாக ஏற்படுகிறது.இதற்கு தீர்வாக, தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி, துரித உணவுகளை உண்ணாமல் இருத்தல், காய்கறி பழங்கள் அதிகமாக உண்ணுதல், வீட்டில் சமைத்த உணவுகளை உண்ணுதல் மற்றும் சிகரெட் புகைக்காமலும், மது அருந்தாமலும் இருக்க வேண்டும்.இரவு ஏழு முதல் எட்டு மணி நேரம் உறங்குவது, வேலை வலுவை குறைத்து குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவது, அதிக நேரம் செல்போன் மற்றும் கணினி உபயோகப்படுத்துவதை குறைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.அபிராமி செவிலியர் கல்லுாரி மாணவியர், கிணத்துக்கடவு ஏனாம் செவிலியர் கல்லுாரி மாணவியர், விழிப்புணர்வு நாடகம், நடனம் வாயிலாகவும், கண்காட்சி வாயிலாகவும், என்ன சாப்பிட வேண்டும்; எதை சாப்பிடக்கூடாது என விளக்கம் அளித்தனர்.சர்க்கரை நோய், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றால், மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படுதல் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்த சுகாதாரமாக சாப்பிட வேண்டும் என விளக்கப்பட்டது.மேலும், அதிகமான எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிட வேண்டாம், காய்கறி, கீரைகள் மற்றும் சத்தான பழங்கள் சாப்பிட வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது.எளிமையான மூச்சுப்பயிற்சி, யோகாசனங்கள் குறித்து யோகா மற்றும் இயற்கை மருத்துவம் வாயிலாக செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
29-Sep-2024