மேலும் செய்திகள்
பருவமழை துவங்கப்போகுது அணைகளில் கண்காணிப்பு
14-Oct-2025
வால்பாறை: வால்பாறையில் பெய்யும் சாரல் மழையால் சுற்றுலா பயணியர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வால்பாறையில், கடந்த 16ம் தேதி முதல் வடகிழக்குப் பருவமழை பரவலாக பெய்கிறது. கடந்த இரண்டு நாட்களாக மழைப்பொழிவு குறைந்து வெயில் நிலவிய நிலையில், நேற்று காலை முதல் மீண்டும் சாரல்மழை பெய்கிறது. தொடர் மழையால் எஸ்டேட் பகுதியில் தேயிலை செடிகள் துளிர்விடத்துவங்கியதால், தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். காலை, மாலை நேரங்களில் எஸ்டேட் பகுதியில் நிலவும் பனிமூட்டத்தாலும், சாரல் மழையாலும் சுற்றுலா பயணியர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனால், பி.ஏ.பி., அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 157.64 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 163 கனஅடி தண்ணீர் வரத்தாக இருந்தது.
14-Oct-2025