உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவைக்கு வருகிறது கனமழை சி.இ.ஓ., முன்னெச்சரிக்கை

கோவைக்கு வருகிறது கனமழை சி.இ.ஓ., முன்னெச்சரிக்கை

கோவை: கோவை மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என, சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கும்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்(சி.இ.ஓ) பாலமுரளி, உத்தரவு பிறப்பித்துள்ளார்.தலைமை ஆசிரியர்களுக்கு அவர் அனுப்பிய சுற்றறிக்கை:பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் உள்ள முக்கிய பொருட்களை, முதல் மாடி அல்லது பாதுகாப்பான இடங்களில் வைக்கவும். பள்ளி மேற்கூரைகளில் தண்ணீர் தேங்குவதை ஆய்வுசெய்து, உடனடியாக நீரை அகற்றும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பழுதடைந்த அல்லது பலவீனமான கட்டடங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.பள்ளி வளாகத்தில் முறிந்து விழும் நிலையில் உள்ள மரங்களை, உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெற்று அகற்றவும். மாணவர்கள் மின்சார போர்டுகள், ஸ்விட்ச் பாக்ஸ் போன்றவற்றின் அருகே செல்லாமல் இருக்க, கவனமாக இருக்க வேண்டும்.இவ்வாறு, அவர் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ