உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஹை ரிஸ்க் டெலிவரி கூடுதல் கவனம் அவசியம்; செவிலியர்களுக்கு அறிவுறுத்தல்

ஹை ரிஸ்க் டெலிவரி கூடுதல் கவனம் அவசியம்; செவிலியர்களுக்கு அறிவுறுத்தல்

கோவை; 'ஹை ரிஸ்க்' டெலிவரி பட்டியலில் உள்ள தாய்மார்களின் பிரசவத்தை முன்கூட்டியே திட்டமிட்டு உரிய ஆலோசனை வழங்க வேண்டும் என, செவிலியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள, மாவட்ட பொது சுகாதாரத்துறை அலுவலகத்தில், நேற்று செவிலியர்களுக்கு அறிவுறுத்தல் கூட்டம் நடந்தது. இதில், கருவுற்ற பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு குறித்தும், ஹை ரிஸ்க் கர்ப்பிணிகளுக்கான தொடர் கண்காணிப்பு செயல்பாடுகள் குறித்து, ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. மாவட்ட சுகாதாரத்துறையின் கீழ், பிரசவ நேர இறப்புகளை குறைக்கும் வகையில், தாய்-சேய் கண்காணிப்பு மையம் செயல்பட்டு வருகிறது. கர்ப்பிணிகளில், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, தைராய்டு மற்றும் பிற நோய் பாதிப்புகள் உள்ளவர்கள் பட்டியல், மாவட்ட அளவில் தொகுக்கப்படுகிறது. இவர்கள் 'ஹை ரிஸ்க் டெலிவரி' என்ற பட்டியலில் வைக்கப்படுகின்றனர். கர்ப்பிணிகள், பிரசவத்திற்கு 180 நாட்கள் முன்னரும், 180 நாட்கள் பின்னரும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர். இதில், ஹை ரிஸ்க் பிரிவில் உள்ளவர்கள், கட்டாயம் எந்த மருத்துவமனையில் சேரவுள்ளனர் என்பதை செவிலியர்கள் அறிந்துகொண்டு, அம்மருத்துவமனையில் உரிய வசதிகள் உள்ளதா என்பதையும் உறுதிசெய்து, வழிகாட்டுதல் அளிக்கவேண்டும் என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. ஹை ரிஸ்க் பட்டியலில் உள்ளவர்கள், ஐ.வி.எப்., வாயிலாக குழந்தை பெறுபவர்கள் விருப்பத்தின் படி, அரசு மருத்துவமனையாக இருந்தாலும், தனியார் மருத்துவமனையாக இருந்தாலும் 'லெவல் -3' அல்லது அதற்கு மேல் தரத்தில் உள்ள மருத்துவமனைகளில் சேர்வதை, செவிலியர்கள் உறுதிசெய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவையில் அனைத்து வட்டாரங்களை சேர்ந்த ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் இதில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை