உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உயர்கல்வித்துறை இன்று கருத்து கேட்பு

உயர்கல்வித்துறை இன்று கருத்து கேட்பு

கோவை; மாநில அரசின் சார்பில் உயர்கல்வித்துறையின் மேம்பாட்டிற்குஎன்னென்ன திட்டங்கள் அவசியம், நிறை மற்றும் குறைபாடுகளை அறியும் வகையில் கருத்து கேட்பு கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடக்கிறது. உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தலைமையில் இக்கூட்டம் நடக்கிறது.இக்கூட்டம், காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை பல்வேறு பிரிவினருக்கு தனித்தனியாக நடத்தப்படுகிறது. ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள், மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள், கல்லுாரி நிர்வாகிகள், நான் முதல்வன் திட்ட செயல்பாடுகள், புதுமைப்பெண் திட்ட பயனாளிகள், 7.5 சதவீத இடஒதுக்கீடு தகுதி பெற்ற பொறியியல் பிரிவு மாணவர்கள் உள்ளிட்ட பிரிவுகளில் பிரதிநிதிகளிடம் கருத்து கேட்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்வுநடக்கவுள்ளது.உயர் கல்வித்துறை செயலாளர் கோபால், கல்லுாரி கல்வி இயக்கக கமிஷனர் சுந்தரவல்லி, தொழில்நுட்ப கல்வி இயக்கக கமிஷனர் ஆபிரகாம் பங்கேற்கின்றனர்.இக்கூட்டத்திற்கான ஏற்பாட்டை கோவை மற்றும் தர்மபுரி கல்லுாரி கல்வி இணை இயக்குனர்கள், கலைச்செல்வி, சிந்தியா செல்வி செய்துள்ளனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை