உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் இந்து அமைப்பினர் கைது

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் இந்து அமைப்பினர் கைது

கோவை: அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பா.ஜ., மாவட்ட தலைவர் ரமேஷ் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் 'திருப்பரங்குன்றம் முருகனுக்கே சொந்தம்' என்ற தலைப்பில் சிவானந்தா காலனி பகுதியில் உள்ள அரங்கில் நேற்று கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து, விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த பலர் அங்கு வந்திருந்தனர். இந்நிலையில் கருத்தரங்கம் நடைபெற இருந்த அரங்கம் முன்பு, இந்து அமைப்பினர் இந்து கடவுள்களை இழிவாக பேசியதாக கொளத்துார் மணியை கண்டித்து திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எவ்வித அறிவிப்பும், அனுமதியும் இல்லாமல் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் ரத்தினபுரி போலீசார் அவர்களை கைது செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ., மாவட்ட தலைவர் ரமேஷ் உள்ளிட்ட 35 பேரை போலீசார் கைது செய்து ரத்தினரபுரி பகுதியில் உள்ள மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை