உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஹிந்து மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் கைது

ஹிந்து மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் கைது

கோவை: நக்கீரன் இதழ் மற்றும் நக்கீரன் யூ டியூப் சேனலில் ஈஷா யோகா மையம் குறித்து அவதுாறு பரப்பி வருவதாக, நக்கீரன் கோபாலை கண்டித்து, ஹிந்து மக்கள் கட்சி சார்பில் கடந்த, 27ம் தேதி கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்திற்கு, ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமை தாங்கினார். அர்ஜுன் சம்பத் மகனும், அக்கட்சியின் இளைஞர் அணி தலைவருமான ஓம்கார் பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் ஓம்கார் பாலாஜி பேசும் போது நக்கீரன் ஆசிரியர் கோபாலின் நாக்கை அறுத்து விடுவேன் என பேசியிருந்தார் என கூறப்படுகிறது. இதுகுறித்து, தி.மு.க.,வை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அப்துல் ஜலில், 74, என்பவர் கடந்த, 28ம் தேதி ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார்.ஓம்கார் பாலாஜி, முன்ஜாமின் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். ஐகோர்ட்டு அவரை புதன்கிழமை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டிருந்தது.ரேஸ்கோர்ஸ் போலீசார், ஓம்கார் பாலாஜியிடம் கடந்த 9ம் தேதி விசாரணை நடத்தினர்.இந்நிலையில், சென்னையில் பாலாஜியை, கோவை போலீசார் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ