உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பசுமையான சூழலில் இந்துஸ்தான் சர்வதேச பள்ளி

பசுமையான சூழலில் இந்துஸ்தான் சர்வதேச பள்ளி

இ ந்துஸ்தான் சர்வதேச பள்ளி புதுமை மற்றும் குழந்தைகளுக்கான கலங்கரை விளக்கமாக திகழ்கிறது. பள்ளி நிர்வாகத்தினர் கூறியதாவது: மாணவர்களுக்கு பசுமையான சூழலில் கல்வி கற்பித்து வருகிறோம். கற்கும் ஆர்வத்தை துாண்டும் வகையிலும், படைப்பாற்றல் திறனை மேம்படுத்தும் வகையிலும் பள்ளியின் சூழல் அமைந்துள்ளது. சிறந்த கல்வியாளர்கள், சிறந்த வழிகாட்டுதலின் வாயிலாக மாணவர்களின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு அவர்களை ஊக்கப்படுத்துகிறோம். எங்கள் மாணவர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்துவமான ஆற்றல் இருப்பதை காண்கிறோம். 'ஊக்கப்படுத்து, புதுமைப்படுத்து, ஒளிரச்செய்' என்ற தத்துவத்தை அடிப்படையாக கொண்டு, மாணவர்களுக்கு அனைத்து பாடங்களையும் அவர்களின் செயல்பாடுடன் தொடர்பு படுத்தி நல்வழிப்படுத்தி வருகிறோம். சர்வதேச அளவில் மதிப்பு மிக்க மாணவர்களை உருவாக்குவதே எங்கள் குறிக்கோளாக கொண்டுள்ளோம். பாடத்துடன் நல்ல மனிதநேயம் மற்றும் சமூகத்துக்கு பயன்படும் ஆற்றல் உடைய மனிதர்களாக உருவாக்குகிறோம். பள்ளியில் உயர்தர ஆய்வகங்கள், பல்வேறு வகையான தகவல் தொடர்பு சோதனைக்கூடங்கள், கற்றல் வெளிப்பாட்டுத் திறனை மேம்படுத்திக் கொள்வதற்கான வகைப்பாடுகளை முன்னெடுத்து வருகிறோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை