ஹாக்கி: சச்சிதானந்த பள்ளி முதலிடம்
மேட்டுப்பாளையம் : சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையே, தெற்கு மண்டல -1, ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகள், மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில், 22ம் தேதி துவங்கி, 26ம் தேதி முடிய ஐந்து நாட்கள் நடந்தன. இதில், 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியருக்கான ஹாக்கி போட்டிகள் நடந்தன. தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து, 52 பள்ளிகளைச் சேர்ந்த, 1,800க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். நாக் அவுட் மற்றும் லீக் அடிப்படையில் போட்டிகள் நடந்தன.14 வயது உட்பட்ட மாணவர் பிரிவில் கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி முதலிடம், தர்மபுரி மகரிஷி வித்யா மந்திர் பள்ளி இரண்டாமிடம், சென்னை எஸ்.பி.ஒ.எ., பள்ளி பூஜை மூன்றாமிடத்தை பெற்றனர். மாணவியர் பிரிவில், சென்னை ஐ.சி.எப்., வித்யா நிகேதன் பள்ளி முதலிடம், அரியலூர் ராம்கோ வித்யா மந்திர் பள்ளி இரண்டாமிடம், சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி மூன்றாமிடத்தை பெற்றனர்.17 வயது உட்பட்ட மாணவர் பிரிவில் மேட்டுப்பாளையம் சச்சிதானந்த பள்ளி முதலிடம், நெய்வேலி ஜவகர் பள்ளி இரண்டாமிடம், அரியலூர் ராம்கோ பள்ளி மூன்றாமிடத்தை பெற்றனர். மாணவியர் பிரிவில், மேட்டுப்பாளையம் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி முதலிடம், கோவை அத்தியானா பள்ளி இரண்டாமிடம், கோவை சரஸ்வதி வித்யாலயா பள்ளி மூன்றாமிடத்தை பெற்றனர்.19 வயது உட்பட்ட மாணவர் பிரிவில் மேட்டுப்பாளையம் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி முதலிடம், தர்மபுரி மகரிஷி பள்ளி இரண்டாமிடம், சென்னை வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளி மூன்றாமிடத்தை பெற்றனர். மாணவியர் பிரிவில் மேட்டுப்பாளையம் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி முதலிடம், சென்னை வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளி இரண்டாமிடம், நெய்வேலி ஜவகர் பள்ளி மூன்றாமிடத்தை பெற்றனர்.பரிசளிப்பு விழாவுக்கு பள்ளியின் செயலர் கவிதாசன் தலைமை வகித்தார். கோவை தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி., பத்ரி நாராயணன்,. பரிசு வழங்கினார்.பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல்,உடற்கல்வி துணை இயக்குநர் அனிதா, பள்ளி ஆலோசகர் கணேசன், ஹாக்கி விளையாட்டு கழக பயிற்சியாளர் செந்தில் ராஜ்குமார், உட்பட பலர் பங்கேற்றனர்.