உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வீடு புகுந்து திருடியவர் கைது

வீடு புகுந்து திருடியவர் கைது

அன்னுார்; அன்னுார் அருகே அழகாபுரி நகரில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ரத்தினசாமி, 44. பைனான்சியர். இவர் கடந்த 31ம் தேதி குடும்பத்தோடு வெளியூர் சென்று விட்டார். செப். 1ம் தேதி வந்து பார்த்தபோது, வீட்டின் முன்புற கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் வைத்திருந்த ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், ஒன்றேகால் சவரன் நகை திருட்டுப் போயிருந்தன. குற்றப்பிரிவு போலீசார் ஜெயபால், சரவணகுமார், குருசாமி ஆகியோர் அப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட 'சிசிடிவி' கேமராக் காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் பழைய குற்றவாளியான கோவை, பீளமேடு, எல்லை தோட்டம், சிவச்சந்திரன், 56. என்பவர் அங்கு திருடியது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் கூறுகையில்,' இவர் மீது ஏற்கனவே பீளமேடு, வடவள்ளி, தொண்டாமுத்தூர், கோவில்பாளையம் உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் 35 திருட்டு வழக்குகள் உள்ளன. அவரிடம் இருந்து திருட்டுப் போன நகை மற்றும் பணம் மீட்கப்பட்டது,' என்றனர். சிவச்சந்திரனை கைது செய்து அன்னுார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை