உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வீட்டு தோட்டம் அமைக்க பயிற்சி

வீட்டு தோட்டம் அமைக்க பயிற்சி

மேட்டுப்பாளையம்; கோவை மாவட்டம் காரமடை அருகே வெள்ளியங்காடு கிராமத்தில் இந்திய ஆராய்ச்சி நிறுவனம் (பெங்களூர்), கோவை மாவட்ட தோட்டக்கலை துறை, அறக்கட்டளைகள் இணைந்து, வீட்டு தோட்டம் அமைப்பது குறித்து பழங்குடியின விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. கோவை மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சித்தார்த்தன் தலைமை தாங்கினார். இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் சங்கர் மற்றும் செந்தில்குமார் கலந்துகொண்டு வீட்டு தோட்டம் அமைப்பது குறித்தும், அதன் பயன்கள் குறித்தும் விரிவாக பயிற்சி அளித்தனர். வீட்டு தோட்டம் அமைப்பதினால் , நமது தேவைகளை நாமே நிறைவேற்றிக்கொள்ள முடியும் என அறிவுறுத்தினர். பின் இதில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு ஐந்து வகையான காய்கறிகள் விதை தொகுப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காரமடை தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் நந்தினி, 50 க்கும் மேற்பட்ட பழங்குடியின விவசாயிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி