பெண்களுக்கான இல்லம் தேடி பயிற்சி
பொள்ளாச்சி: கிணத்துக்கடவு, ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லுாரி, மத்திய அரசின் சிறு,குறு நடுத்தர தொழில்துறை இணைந்து, 'எம்.எஸ்.எம்.இ. 3.0' திட்டத்தின் கீழ் கிராமப்புற பெண்களுக்கான, இல்லம் தேடி பயிற்சி நிகழ்ச்சி, பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டியில் கடந்த மாதம், 28ம் தேதி துவங்கி இன்று வரை நடக்கிறது. இந்த பயிற்சியில், வளையல் தயாரித்தல், அழகு பராமரிப்பு, கைத்தறி பொருட்கள், பேக்கரி, காளாண் வளர்ப்பு, யுபிஎஸ் நிறுவல், மின்கம்பி வேலை, வாகன பராமரிப்பு, தேங்காய் சீம்பால் தயாரித்தல் போன்ற துறைகளில் மகளிருக்கு நடைமுறை பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இப்பயிற்சிக்கு ஸ்ரீ ஈஸ்வர கல்லுாரியின் ஆராய்ச்சி துறை டீன் கருப்புசாமி வழிகாட்டுதலின் பேரில், பேராசிரியர்கள் கவிதா, பிரியா ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்படுகின்றனர். இந்த பயிற்சி கிராமப்புற மகளிருக்கு தொழில் முனைவர் திறனை வளர்த்து சுய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கான சிறந்த தளமாக அமைகிறது என பெண்கள் தெரிவித்தனர்.