உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கண்ணில் கருப்பு துணி கட்டி கவுரவ விரிவுரையாளர் போராட்டம்

கண்ணில் கருப்பு துணி கட்டி கவுரவ விரிவுரையாளர் போராட்டம்

- நமது நிருபர் -பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்ணில் கருப்பு துணி கட்டி, அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அரசு கல்லுாரிகளில், கவுரவ விரிவுரையாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள், தங்களுக்கு, 'பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்; இறந்தவர்களின் குடும்பத்துக்கு கருணைத் தொகை வழங்க வேண்டும்; யு.ஜி.சி., மற்றும் ஐகோர்ட் தீர்ப்பின் படி கவுரவ விரிவுரையாளர் களுக்கான மாத ஊதியம், 50 ஆயிரம் வழங்க வேண்டும்,' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கவுரவ விரிவுரையாளர் சங்கம் சார்பில், திருப்பூர், சிக்கண்ணா கல்லுாரியில் போராட்டம் நடந்தது.கல்லுாரி நுழைவு வாயிலில் அமர்ந்த பேராசிரியர்கள், கண்ணில் கருப்பு துணி கட்டி, கோரிக்கைகளை கோஷங்களாக எழுப்பினர்.கவுரவ விரிவுரையாளர் சங்க பொறுப்பாளர் காளிதாஸ் தலைமை வகித்தார். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை