உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விவசாயிகள் கவுரவிப்பு

விவசாயிகள் கவுரவிப்பு

சூலுார்:திருமூலர் வாழ்வியல் அறக்கட்டளை சார்பில், சூலுார் தனியார் மண்டபத்தில், விவசாயிகளுக்கு பாராட்டு தெரிவித்து கவுரவிக்கும் விழா நடந்தது.அறக்கட்டளை நிறுவனர் பேராசிரியர் ஈஸ்வரன் பேசுகையில், உழவால் கிடைக்கும் உணவு பொருட்களை பிறருக்கு வழங்கும் விவசாயிகள் தான் விருட்சங்கள் ஆவர்.என்றார். தொடர்ந்து, விவசாயிகளுக்கு பொன்னாடைகள் அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். இயற்கை வேளாண் விஞ்ஞானி மயில்சாமி, டாக்டர் முத்து சரவணகுமார் உள்ளிட்டோர் பேசினர். அறக்கட்டளை தலைவர் பெருமாள்சாமி, பொருளாளர் நடராஜன், மணிமொழி, தமிழக விவசாயிகள் சங்க தலைவர் தண்டபாணி, ஆசிரியர்கள் கிருஷ்ணசாமி, பாக்கியலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்