உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு பள்ளி மாணவர்களுக்கு தோட்டக்கலை பண்ணை பயிற்சி

அரசு பள்ளி மாணவர்களுக்கு தோட்டக்கலை பண்ணை பயிற்சி

மேட்டுப்பாளையம்; அரசு மேல்நிலைப்பள்ளி பன்னிரண்டாம் வகுப்பு, வேளாண் அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு, தோட்டக்கலைப் பண்ணை பயிற்சி அளிக்கப்பட்டது. காரமடை அருகே புஜங்கனூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு வேளாண் அறிவியல் பிரிவில், மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இந்த மாணவர்களுக்கு அரசு தோட்டக்கலைப் பண்ணையில், 10 நாட்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளன. இதற்காக இந்த மாணவர்கள் ஆனைகட்டியில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில் பயிற்சி பெற்று வருகின்றனர். புஜங்கனூர் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஜோதிமணி, வேளாண் அறிவியல் ஆசிரியர் மணிவண்ணன், முதுகலை தமிழாசிரியை சுமதி ஆகியோர் பயிற்சி வகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மாணவர்களுக்கு பண்ணையில் வேளாண் சம்பந்தமான ஆராய்ச்சி குறிப்புகளை சேகரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை