மேலும் செய்திகள்
வைக்கோல் தீ பிடித்து எரிந்து சேதம்
15-Jul-2025
மேட்டுப்பாளையம்; கோவை மாவட்டம் காரமடை நகராட்சி 17 வது வார்டுக்குட்பட்ட சாஸ்திரி நகரை சேர்ந்தவர் காமராஜ், 38. இவரது மனைவி புனிதா. இவர்கள் இருவரும் தனியார் நிறுவனங்களில் பணி புரிந்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று காமராஜ், புனிதா ஆகியோர் பணிகளுக்கு சென்றுவிட, குழந்தைகள் பள்ளிக்கு சென்ற நிலையில், வீட்டில் யாரும் இல்லாத போது திடீரென வீட்டில் உள்ள படுக்கை அறையில் தீப்பிடித்தது. மேட்டுப்பாளையம் தீயணைப்பு அலுவலர் அனில்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். பொருட்கள் எரிந்து சேதமானது. விளக்கு ஏற்றிவிட்டு அதை அணைக்காமல் சென்றதே, தீ விபத்துக்கு காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.-
15-Jul-2025