உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உயர்மாடி கட்டடங்களில் விபத்தில் சிக்கும் மக்களை மீட்பது எப்படி? தீயணைப்பு துறையினர் ஒத்திகை

உயர்மாடி கட்டடங்களில் விபத்தில் சிக்கும் மக்களை மீட்பது எப்படி? தீயணைப்பு துறையினர் ஒத்திகை

கோவை: உயர்மாடி கட்டடங்களில் ஏற்படும் விபத்துகளின் போது, சிக்கிக்கொள்ளும் மக்களை மீட்பது குறித்து, தீயணைப்புத்துறையினர் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.பல மாடி கட்டடங்களில் ஏற்படும் விபத்துகளின் போது, மக்களை மீட்க உதவியாக இருக்கும் வகையில், கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு வான் நோக்கி நகரும் (ஸ்கை லிப்ட்) வாகனம் வழங்கப்பட்டது.இந்த 'பிராண்டோ ஸ்கை லிப்ட்' வாகனம் மூலம், 54 மீட்டர் உயரம் உள்ள இடங்களில் தீ விபத்தகளில் சிக்கும் பொதுமக்களை மீட்க முடியும்.இந்த வாகனத்தின் மூலம் பொதுமக்களை மீட்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி, மருதமலை சாலையில் உள்ள, தனியார் நிறுவன வளாகத்தில், தீயணைப்புத்துறை உதவி மாவட்ட அலுவலர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது. 13 மாடிகள் கொண்ட 74 மீட்டர் உயர கட்டடத்தில், தீயணைப்புத்துறையினர் ஒத்திகை செய்தனர். இதில் 12 தீயணைப்பு துறை அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர். தங்கள் நிறுவனத்தில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்த விரும்புவோர், தீயணைப்புத்துறையை தொடர்பு கொள்ளலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !