உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மண்ணை காக்க மனித குலம் ஒன்றிணைய வேண்டும்: சத்குரு

மண்ணை காக்க மனித குலம் ஒன்றிணைய வேண்டும்: சத்குரு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தொண்டாமுத்தூர்: மண் காப்போம் இயக்கத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவையொட்டி, 'மண்ணைக் காக்க மனித குலம் ஒன்றிணைய வேண்டும்' என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கருத்து தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில், அவர் கூறியுள்ளதாவது: நாம் அனைவரும் மண்ணில் இருந்து பிறக்கின்றோம். மண்ணில் வாழ்ந்து, இறுதியில் மண்ணிலேயே திரும்புகின்றோம். நாம் உருவாக்கிய அனைத்து பிரிவுகள் மற்றும் பிரிவினைகளுக்கும் அப்பால், மண் நம்மை ஒன்றிணைக்கிறது. இதை விழிப்புணர்வுடன் உணரவும், மண்ணைக் காக்கவும், மனித குலம் ஒன்றிணைய வேண்டும். நாம் ஒரு செழிப்பான சுற்றுச்சூழலை உருவாக்கினால் மட்டுமே, நமது பொருளாதாரங்கள் செழிக்க முடியும். ஒவ்வொரு நாட்டின் குடிமக்களும், தங்கள் நாட்டின் மண்ணை பாதுகாக்க உறுதிமொழி எடுக்க வேண்டும். இவ்வாறு, சத்குரு பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

J.Isaac
மார் 22, 2025 08:10

யானை வழித்தடத்தை ஆக்கிரமித்துள்ளனர் சிலர்


N Sasikumar Yadhav
மார் 22, 2025 12:30

காருண்யாவை இப்படியெல்லாம் பேசக்கூடாது . பிறகு திராவிட மாடல் அரசின் காவால்துறை உங்கள சிறையில் தள்ளிவிடும்


ஆரூர் ரங்
மார் 22, 2025 12:52

காருண்யம் மிக்கவர்களா?


முருகன்
மார் 22, 2025 06:35

காடுகளை காப்போம்


pmsamy
மார் 22, 2025 06:26

மனித இனம் குறைந்தாலே மண்வளம் பெருகும்


லிங்கம், கோவை
மார் 22, 2025 05:14

மிக்க நன்றி சத்குரு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை