மேலும் செய்திகள்
புறவழிச் சாலை எதிர்ப்பு இயக்கம் இன்று ஆலோசனை
07-Sep-2025
'கிழக்கு புறவழிச்சாலை திட்டம் வேண்டாம்'
31-Aug-2025
கோவில்பாளையம்; கிழக்கு புறவழிச் சாலை திட்டத்தை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கோவை கிழக்கு புறவழிச் சாலை எதிர்ப்பு இயக்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் காளிபாளையத்தில் நடந்தது. முன்னாள் ஒன்றிய சேர்மன் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், மாநில தலைவர் சண்முகம், முன்னிலை வகித்து பேசுகையில், ஏற்கனவே மாநில நெடுஞ்சாலை, மாவட்டச் சாலைகள், கிராம சாலைகள் அதிக அளவில் உள்ளன. தற்போது புதிதாக திட்டமிடப்பட்டுள்ள சாலையால் பயன் இருக்காது. இதை கைவிட வேண்டும், என்றார். கூட்டத்தில் புதிதாக திட்டமிடப்பட்டுள்ள புறவழிச்சாலையால் பல நூறு ஏக்கர் விவசாய நிலங்களும் குடியிருப்புகளும் பாதிக்கப்படும். எனவே, மத்திய, மாநில அரசுகள் இத்திட்டத்தை கைவிட வேண்டும். இதை வலியுறுத்தி ஊராட்சி வாரியாக விழிப்புணர்வு கூட்டம் நடத்துவது. இதையடுத்து 2000 பேர் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது. அரசு பிரதிநிதிகளிடம் மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் நிர்வாகிகள் பேசுகையில்,' நிலத்தை மார்க்கிங் செய்தது யார் என்கிற கேள்விக்கு கலெக்டர், ஆர்.டி.ஓ., மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பதிலளிக்க மறுக்கின்றனர். எனவே மார்க்கிங்கை தார் பூசி அழிக்க வேண்டும்,' என்றனர். கூட்டத்தில், ஏர்முனை அமைப்பின் மாவட்ட பொருளாளர் மோகன்ராஜ், பா.ஜ., முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் சத்தியமூர்த்தி, முன்னாள் ஊராட்சித் தலைவர் சந்திரசேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.
07-Sep-2025
31-Aug-2025