உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வருவதும் தெரியல; போவதும் தெரியல! மின்தடையால் விவசாயிகள் வேதனை

வருவதும் தெரியல; போவதும் தெரியல! மின்தடையால் விவசாயிகள் வேதனை

குடிமங்கலம் -ஆலாமரத்துார் துணை மின் நிலையத்துக்குட்பட்ட கிராமங்களுக்கு, சீரான மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை மின்பகிர்மான வட்டம், ஆலாமரத்துார் துணை மின் நிலையம் வாயிலாக, வீதம்பட்டி, அனிக்கடவு, ராமச்சந்திராபுரம், விருகல்பட்டி, வல்லக்குண்டாபுரம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்வினியோகம் செய்யப்படுகிறது.விவசாயம் பிரதானமாக உள்ள இப்பகுதியில், பல ஆயிரம் ஏக்கரில், கிணற்றுப்பாசனத்தை அடிப்படையாகக்கொண்டு, நீண்ட கால பயிராக தென்னை மற்றும் காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கிணறு மற்றும் போர்வெல்களை இயக்க சில மாதங்களுக்கு முன்பு வரை, தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. கடந்த சில வாரங்களாக, மும்முனை மின் வினியோகம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.பகலில் குறைந்த மணி நேரம் மட்டுமே மும்முனை மின் வினியோகம் இருக்கிறது. இதனால், பயிர்களுக்கும், தென்னை மரங்களுக்கும் குறித்த நேரத்தில், தண்ணீர் பாய்ச்ச முடியாமல், விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.விவசாயிகள் கூறியதாவது: போதிய மழை இல்லாமல், வெயிலும் கொளுத்தி வருவதால், நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. குறைந்தளவு தண்ணீரையும் குறித்த நேரத்தில் பாய்ச்ச முடியாததால், பயிர்களை காப்பாற்ற போராட வேண்டியுள்ளது.இச்சூழலில், ஆலாமரத்துார் துணை மின்நிலையத்தில் இருந்து, மும்முனை மின் வினியோக நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்து முறையான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.அதிகாலையிலும், மாலை நேரத்திலும், மின்சாரம் இருப்பதில்லை. இரவிலும், பகலிலும், எப்போது மும்முனை மின் வினியோகம் இருக்கிறது எனவும் தெரியவில்லை. பல மணி நேரம் காத்திருந்து மோட்டாரை இயக்க வேண்டியுள்ளது.எனவே வினியோகம் குறித்து மின்வாரியத்தினர் முறையான அறிவிப்பு வெளியிட வேண்டும். கோடை காலத்தில், தடையில்லாமல், மின்சாரம் வினியோகித்தால் மட்டுமே, பயிர்களையும், தென்னை மரங்களையும் காப்பாற்ற முடியும்.இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ