உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே... அரை நுாற்றாண்டுக்கு பின் மலரும் நினைவுகள்

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே... அரை நுாற்றாண்டுக்கு பின் மலரும் நினைவுகள்

கோவை; சபர்பன் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள், 50 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.கோவை ராம் நகர், சபர்பன் மேல்நிலைப்பள்ளியில் கடந்த, 1974ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி., படிப்பை முடித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நேற்று பள்ளியில் நடந்தது. வங்கி உட்பட பல்வேறு துறைகளில் பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற்ற, 70 பேர் இதில் பங்கேற்று மலரும் நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.மூத்த வழக்கறிஞர் நாகசுப்ரமணியம், பள்ளி தாளாளர் பிரிதிவி சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். முன்னாள் தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன், முன்னாள் ஆசிரியர் ராமலிங்கம், முன்னாள் உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கரப்பன், வாசுதேவன், பாக்கியம் ஆகியோரை கவுரவித்து, முன்னாள் மாணவர் சங்கத்தினர்ஆசி பெற்றனர்.நிறைவில், பாட்டு, இசை நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் பங்கேற்று குதுாகலம் அடைந்தனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் கணபதி ராமசுப்ரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை