மேலும் செய்திகள்
பள்ளி, கல்லுாரி செய்திகள்...
23-Mar-2025
போத்தனூர்: கோவை, பள்ளி கல்வித்துறை சார்பில், மதுக்கரை வட்டார அளவிலான சிறார் திரைப்பட மன்ற செயல்பாடுகளுக்கான போட்டி, கடந்த மாதம் நடந்தது.இதில் வெள்ளலூர், இடையர்பாளையம் நடுநிலைப்பள்ளி மாணவி மோகனலட்சுமி தலைமையிலான குழுவினர், முதலிடம் பிடித்தனர். மாவட்ட அளவிலும் முதலிடத்தை வென்றனர்.இதையடுத்து, மாணவி மோகனலட்சுமி சென்னையில் நடந்த, மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று, ஆறுதல் பரிசு வென்றார்.இதனை தொடர்ந்து, மாணவி மோகனலட்சுமி மற்றும் அவருடன் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்ற மணிகண்டன், கோகுல், சந்தியா, ஹர்ஷினி ஆகியோருக்கு பள்ளி சார்பில் பாராட்டு விழா நடந்தது.தலைமையாசிரியர் சேகர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் உள்ளிட்டோர் பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசு வழங்கினர். நாடகத்திற்கு பயிற்சியளித்த ஆசிரியர் சத்யபிரபா கவுரவிக்கப்பட்டார்.
23-Mar-2025