உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / யானை வழித்தடத்தில் ரேஷன் கடைகள் கன்டெய்னர் கடை அமைக்க யோசனை

யானை வழித்தடத்தில் ரேஷன் கடைகள் கன்டெய்னர் கடை அமைக்க யோசனை

வால்பாறை: யானை வழித்தடத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என ஆலோசனைக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.வால்பாறை தாலுகாவில் உள்ள, 15,250 ரேஷன் கார்டுதாரர்களுக்கு, 48 ரேஷன் கடை வாயிலாக அத்தியாவசியப்பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், ரேஷன் கடைகள் அனைத்தையும் யானைகள் அடிக்கடி சேதப்படுத்தி வருவதால், பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமாகி வருவதோடு, பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் பொருட்கள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.யானைகளின் தொந்தரவால் வால்பாறையை சுற்றியுள்ள பெரும்பாலான எஸ்டேட்களில், மாதம் தோறும் திறந்தவெளியில் தான் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன.குறிப்பாக, பன்னிமேடு பங்களா டிவிஷன் பகுதியில் செயல்படும் ரேஷன் கடையை, யானைகள் முழுமையாக சேதப்படுத்தியதால், கட்டடத்தின் நான்கு புற சுவர்களும் இடிந்த நிலையில் உள்ளது.அதே இடத்தில், ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதால், பொருட்களை வாங்கி செல்லும் மக்களுக்கு போதிய பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. இதுகுறித்து, கடந்த வாரம் 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.இதனை தொடர்ந்து வால்பாறை தாலுகா அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் தாசில்தார் (பொ) மோகன்பாபு, வட்ட வழங்கல் அலுவலர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. கூட்டத்தில், வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட் பகுதியில் உள்ள ரேஷன் கடைகள் யானைகள் வழித்தடத்தில் அமைந்துள்ளன. இதனால், அடிக்கடி யானைகள் கடைகளை உடைத்து சேதப்படுத்துகின்றன.வால்பாறையில் முதல் கட்டமாக, தாய்முடி, முத்துமுடி ஆகிய இரண்டு எஸ்டேட் பகுதியிலும், கன்டெய்னர் கடைகள் அமைத்து அதன் வாயிலாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதே போன்று, பிற எஸ்டேட் பகுதிகளில் உள்ள கடைகளையும் கன்டெய்னர் கடைகளாக மாற்றியமைக்க வேண்டும், என, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.கூட்டத்தில், தனியார் எஸ்டேட் அதிகாரிகள், ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி