உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காதலிக்க மாட்டேன் என்று சொன்னால் தப்பா! ஐ.டி.ஐ., மாணவருக்கு அடி; மூவர் கைது

காதலிக்க மாட்டேன் என்று சொன்னால் தப்பா! ஐ.டி.ஐ., மாணவருக்கு அடி; மூவர் கைது

போத்தனூர்; கோவை, போத்தனூரை சேர்ந்தவர், 20 வயது கல்லூரி மாணவி. இவரது தோழி மூலம் சூர்யா என்பவர் அறிமுகமானார். அவர் அப்பெண்ணை காதலிப்பதாக கூறினார். அப்பெண் ஏற்கவில்லை. இருப்பினும் சூர்யா தொடர்ந்து தொந்தரவு கொடுத்தார். அப்பெண், ஐ.டி.ஐ., பயிலும் தனது சகோதரர் பிரவீன்குமாரிடம் கூறியுள்ளார்.பிரவீன்குமார் தனது நண்பர் தருண் உள்ளிட்ட சிலருடன், சென்று சூர்யாவிடம் இதுகுறித்து கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது. சூர்யாவை பிரவீன்குமார் தாக்கினார்.இந்நிலையில், நேற்று முன்தினம் காலை பிரவீன்குமார் சாரதா மில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, சூர்யா மேலும் மூவருடன் காரில் வந்து, செட்டிபாளையம் பகுதிக்கு கடத்திச்சென்றனர்.அங்கு பிரவீன்குமாரை சரமாரியாக தாக்கினர். இதன் பின், சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு போன் செய்து, 'நண்பர் தருணை அழைத்து வர வேண்டும். தவறினால் பிரவீன்குமாரை கொல்வேன்' என சூர்யா கூறியுள்ளார்.அப்பெண் தனது சகோதர் முறை உறவினர் விஜய், தருண் மற்றும் அவரது நண்பருடன், சூர்யா குறிப்பிட்ட இடத்திற்கு சென்றனர். அங்கு பிரவீன்குமாரை விடுவித்த சூர்யா, தருணை கூட்டிச்சென்று தாக்கி விட்டு, தப்பிச் சென்றனர்.இச்சம்பவம் குறித்து போத்தனூர் போலீசில் பெண் புகார் செய்தார். விசாரித்த போலீசார் சிங்காநல்லூரை சேர்ந்த திருமுருகன், 21, சங்கர், 21 மற்றும் கலையரசன், 19 ஆகியோரை கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான சூர்யாவை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ