சட்டவிரோதமாக மது விற்றவர்கள் கைது
சூலுார அரசு விடுமுறை நாளில் சட்டவிரோதமாக மது விற்றவர்களை போலீசார் கைது செய்தனர்.திருவள்ளுவர் தினத்தை ஒட்டி, நேற்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறையாகும். அன்று மது விற்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்திருந்தனர்.இதையொட்டி போலீசார் நேற்று புறநகரில் தீவிர ரோந்து மேற்கொண்டனர். இந்நிலையில், கருமத்தம்பட்டி, சூலுார், சுல்தான் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில், சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி விற்றது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் மூன்று பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 100 க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.