உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஜி.கே.என்.எம்.,ல் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு குறைபாடு கிளினிக்

ஜி.கே.என்.எம்.,ல் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு குறைபாடு கிளினிக்

கோவை; குழந்தைகளுக்கான பிரத்யேக நோய் எதிர்ப்பு குறைபாடு கிளினிக், கோவை ஜி.கே.என்.எம்., மருத்துவமனையில் திறக்கப்பட்டது.பி.ஜி.ஐ.எம்.இ.ஆர்., மருத்துவமனை குழந்தைகள் மருத்துவத்துறை தலைவர் டாக்டர் சுர்ஜித் சிங் காணொலி வாயிலாக திறந்துவைத்தார். ஜி.கே.என்.எம்., தலைமை செயல் அதிகாரி ரகுபதி வேலுசாமி தலைமை வகித்து கூறியதாவது: நோய் எதிர்ப்பு குறைபாடு உள்ள அனைத்து குழந்தைகளுக்கும், அதிநவீன மருத்துவ சிகிச்சை வழங்க உள்ளது. சந்தேகப்படும் அல்லது உறுதிப்படுத்தப்பட்ட நோய் எதிர்ப்பு குறைபாடுகள் உள்ள குழந்தைகளின் நோய் கண்டறிதல், சிகிச்சைகள், நீண்டகால நோய் மேலாண்மை, மற்றும் பிற நிரந்தர சிகிச்சைகளும், இங்கு அளிக்கப்படும். நோய் எதிர்ப்பு குறைபாடுள்ள, 5 குழந்தைகளுக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைகளை எங்களது மருத்துவமனை செய்துள்ளது. முதல் நிலை நோய் எதிர்ப்பு குறைபாடுள்ள கிட்டத்தட்ட, 100 குழந்தைகளின் பெற்றோருக்கு, உரிய வழிகாட்டுதலை வழங்கியுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். இந்நிகழ்வில், வேலுார் சி.எம்.சி.,மருத்துவ கல்லுாரியின் நோய் எதிர்ப்பு மற்றும் குழந்தைகள் வாத நோய் டாக்டர் சதீஷ்குமார், குழந்தைகளுக்கான ரத்தக்கசிவு நிபுணர் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று டாக்டர் அஜீதா, தொற்று நோய் ஆலோசகர் டாக்டர் ரமேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை