உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தணும்! கிராம சபையில் தீர்மானம்

மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தணும்! கிராம சபையில் தீர்மானம்

கிராம சபை கூட்டத்தில், மக்களுக்கான அடிப்படை வசதியை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பொள்ளாச்சி தெற்கு, வடக்கு, ஆனைமலை மற்றும் கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட 118 ஊராட்சிகளில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, கிராமசபை கூட்டம் நடந்தது.* பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் உள்ள, 26 ஊராட்சிகளில், பெண்கள், 2,541 பேர் உட்பட, மொத்தம், 4,449, பேர் பங்கேற்றனர். மொத்தம், 394 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.* பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் உள்ள, 39 ஊராட்சிகளில், ஆண்கள், 2,554, பெண்கள், 3,431 என மொத்தம், 5,985 பேர் பங்கேற்றனர். மொத்தம், 705 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.* ஆனைமலை ஒன்றியத்தில், 19 ஊராட்சிகளில், ஆண்கள், 1,670, பெண்கள், 1,966 என மொத்தம்,3636 பேர் பங்கேற்றனர். அதில், 308 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பொள்ளாச்சி கோட்டத்தில் தெற்கு, வடக்கு மற்றும் ஆனைமலையில் உள்ள, 84 ஊராட்சிகளில், 1,407 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மொத்தம், 14,070 பேர் பங்கேற்றனர்.* கிணத்துக்கடவு ஒன்றியத்தில் உள்ள, 34 வருவாய் கிராமங்களில் நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. இதில், பெண் கல்வியை ஊக்குவித்தல், குழந்தை திருமணம் மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்தல், கிராமத்தில் மக்களுக்கான அடிப்படை வசதியை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.34 ஊராட்சிகளில், 2,466 ஆண்கள் மற்றும் 2878 பெண்கள் என மொத்தம் 5,344 பேர் பங்கேற்றனர். இதில், 585 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.* உடுமலை, குடிமங்கலம் ஒன்றியங்களில் நடந்த கிராம சபை கூட்டத்தில், மொத்தம், 1,246 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.உடுமலை ஒன்றியத்திலுள்ள, 38 ஊராட்சிகளில் நடந்த கிராம சபை கூட்டத்தில், 6,923 பேர் பங்கேற்றனர்; 766 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.* குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள, 23 ஊராட்சிகளில், 480 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது; 4,143 பேர் பங்கேற்றனர். காசநோய் இல்லாத ஒன்றியமாக மாற்றுதல்; போதைப்பொருள் ஒழிப்பு, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து கிராம சபையில் பங்கேற்றவர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.* அனிக்கடவு ஊராட்சியில், மின்வினியோகம் குறித்து பல்வேறு பிரச்னைகள் உள்ளது. அது குறித்து விவாதிக்க, கிராம சபையில் அத்துறை அதிகாரிகள் பங்கேற்பதில்லை. அனைத்து துறை அதிகாரிகளையும் கூட்டத்தில் பங்கேற்க செய்ய வேண்டும். ராமச்சந்திராபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், வசதிகளை மேம்படுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.சோமவாரப்பட்டி ஊராட்சியில், தாராபுரம் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில், போதை பொருள் ஒழிப்பு குறித்த உறுதிமொழியை மக்கள் ஏற்றுக்கொண்டனர். ஒன்றிய அலுவலர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக செயல்பட்டனர். - நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ