உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நில அளவீடு செய்ய புதிய வசதி துவக்கம்

நில அளவீடு செய்ய புதிய வசதி துவக்கம்

கோவை:நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய, சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், https://tamilnilam.tn.gov.in.citizen என்ற இணைய வழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதி துவக்கப்பட்டிருக்கிறது.நில அளவை செய்வதற்கான கட்டணத்தை வங்கிகளுக்கு சென்று செலுத்த வேண்டியதில்லை; இணைய வழியிலேயே கட்டணம் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. நில அளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது தொலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும்.நில அளவை செய்த பின், மனுதாரர் மற்றும் நில அளவர் கையொப்பமிட்ட அறிக்கை, வரைபடம் ஆகியவற்றை, https://eservices.tn.gov.inஎன்ற இணைய வழி சேவை மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில், நில அளவரால் பதிவேற்றம் செய்யப்படும். இச்சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம், என, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்