ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்வு
பொள்ளாச்சி ;பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரியில், அறக்கட்டளை ஊக்கத்தொகை வழங்கும் விழா நடந்தது. மாணவர் நல முதன்மையர் முத்துக்குமரன் வரவேற்றார். முதல்வர் மாணிக்கச்செழியன் தலைமை வகித்து, 160 மாணவ, மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்கினார்.தொடர்ந்து, ஊக்கத்தொகை பெற்று பயிலும் மாணவர்கள், தங்கள் திறமையை வளர்த்துக் கொண்டு, சமுதாய நோக்குடன் செயல்பட வேண்டும், என, தெரிவித்தார்.கல்லுாரி இயக்குனர் சரவணபாபு, வணிகவியல் துறைத்தலைவர் பிருந்தா ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.