உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வருமான வரி ரீபண்ட் போலி மின்னஞ்சலில் வலை

வருமான வரி ரீபண்ட் போலி மின்னஞ்சலில் வலை

கோவை : வருமான வரித்துறையில் இருந்து ரீபண்ட் அளிப்பதாக வரும் போலி மின்னஞ்சல்களை நம்ப வேண்டாம் என, மத்திய அரசின் செய்தி மற்றும் தகவல் தொடர்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.இதுதொடர்பாக, பத்திரிகை தகவல் அலுவலகம் கூறியிருப்பதாவது:வருமான வரித்துறையில் இருந்து, ரூ. 50 ஆயிரம் ரீபண்ட் அளிப்பதாக, போலி மின்னஞ்சல் அனுப்பப்படுகிறது. ரூ. 25 ஆயிரத்துக்கு மேல் பணம் அனுப்புவதாக இருந்தால் நேரடி சரிபார்ப்பு செய்ய வேண்டும் என, இந்திய ரிசர்வ் வங்கியும், சட்ட விரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டமும் சொல்கின்றன.எனவே, தங்களின் விவரங்களை நேரடியாக சரிபார்க்க வேண்டும். அதற்காக வங்கிக் கணக்கு, பான் எண், ஆதார் எண் ஆகியவற்றைத் தெரிவிக்க வேண்டும் என, அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மின்னஞ்சல் போலியானது. சந்தேகத்துக்கு இடமான இணைப்புகளைக் கிளிக் செய்யவோ அல்லது தனிப்பட்ட நிதி அல்லது முக்கியத் தகவல்களை மின்னஞ்சல், எஸ்.எம்.எஸ்., அல்லது தொலைபேசி அழைப்பு வாயிலாக பகிர வேண்டாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி