உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வால்பாறையில் சாரல் மழை; தேயிலை உற்பத்தி அதிகரிப்பு

வால்பாறையில் சாரல் மழை; தேயிலை உற்பத்தி அதிகரிப்பு

வால்பாறை: வடகிழக்குப்பருவ மழை சாரல்மழையாக பெய்து வருவதால்,தேயிலை செடிகள் மீண்டும் துளிர்விடத்துவங்கியுள்ளன. இதனால், தேயிலை உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. கோவை மாவட்டத்தில் வால்பாறை சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகின்றனர். வால்பாறை மலைப்பகுதியில் தேயிலைத்தொழில் மிக முக்கிய தொழிலாக உள்ளது. இங்குள்ள, 30க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய தேயிலை எஸ்டேட்களில், 25 ஆயிரம் ெஹக்டேர் பரப்பளவில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் இறுதியில் இங்கு துவங்கிய பருவ மழை, தொடர்ந்து நான்கு மாதங்களாக, பெய்து வந்த நிலையில், தேயிலை செடிகள் துளிர்விட முடியாமல் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்நிலையில், தென்மேற்குப்பருவ மழை கடந்த வாரம் முடிந்த நிலையில், தற்போது வடகிழக்குப்பருவ மழை பெய்யத்துவங்கியுள்ளது. பருவ மழை சாரல்மழையாக பெய்து வருவதோடு, இடையிடையே வெயில் நிலவுவதால் எஸ்டேட் பகுதியில் தேயிலை செடிகள் மீண்டும் துளிர்விட்டுள்ளதோடு, உற்பத்தியும் அதிகரித்துள்ளது. தோட்ட அதிகாரிகள் கூறுகையில், 'பருவ மழை படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தேயிலை உற்பத்தியும் அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால் தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு, 60 கிலோ தேயிலை பறிக்கின்றனர். தொடர்ந்து இதே நிலை நீடித்தால் வரும் ஏப்ரல் மாதம் வரை தேயிலை உற்பத்தி மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி