நீர்வரத்து அதிகரிப்பு
ஒகேனக்கல்: தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரிட்டி, நாட்றாம்பாளையம், தேன்கனிக்கோட்டை, பிலிகுண்டுலு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த, 2 நாட்களாக பெய்து வரும் மழையால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு வினாடிக்கு, 3,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 5:00 மணிக்கு, 6,500 கன அடியாக அதிகரித்து. இதனால், ஒகேனக்கல் காவிரியாற்றில், மெயின் அருவி, மெயின் பால்ஸ், சினி பால்ஸ், ஐந்தருவி, ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.