உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு

 வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு

மேட்டுப்பாளையம்: கோத்தகிரி, மேட்டுப்பாளையம் வனப்பகுதிகளில் பசுமை திரும்பி உள்ளது. இதனால் சாலை ஓரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மேட்டுப்பாளையம் வனப்பகுதியை ஒட்டி கோத்தகிரி வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதிகளில் காட்டு யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் உள்ளன. இப்பகுதிகளில் பெய்த மழை காரணமாக, வனப்பகுதிகள் முழுவதும் பசுமையாக காட்சியளிக்கின்றன. மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரிக்கு செல்லும் சாலையில், சாலையோரம் உள்ள பசுந்தீவனங்களை மேய்வதற்கு வனவிலங்குகள் அதிகம் வருகின்றன. இச்சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து, மேட்டுப்பாளையம் வனத்துறையினர் கூறுகையில், ''சுற்றுலா பயணிகள், வனவிலங்குகளை தொந்தரவு செய்யக்கூடாது. மிகவும் கவனமாக செல்ல வேண்டும். வாகனத்தை சாலை ஓரங்களில் நிறுத்தக்கூடாது,'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ