உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுதந்திர தின கிராம சபை கூட்டம்; பொதுமக்களுக்கு அழைப்பு

சுதந்திர தின கிராம சபை கூட்டம்; பொதுமக்களுக்கு அழைப்பு

தொண்டாமுத்தூர்; நாட்டின் 79வது சுதந்திர தின விழா, நாடு முழுவதும் இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினத்தையொட்டி, கிராம ஊராட்சிகளில், இன்று கிராம சபை கூட்டம் நடக்கிறது. தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, பேரூர் செட்டிபாளையம், தீத்திபாளையம், மாதம்பட்டி, மத்வராயபுரம், இக்கரை போளுவாம்பட்டி, ஜாகீர்நாயக்கன்பாளையம், நரசீபுரம், வெள்ளிமலைபட்டிணம், தேவராயபுரம், தென்னமநல்லூர் ஆகிய, 10 ஊராட்சி மன்ற அலுவலகங்களில் இன்று காலை, 11:00 மணிக்கு, கிராம சபை கூட்டம் நடக்கவுள்ளது. இதில், ஊராட்சிகளின் வரவு, செலவு கணக்குகள், புதிய திட்டங்கள், மேற்கொள்ளப்பட்டது வரும் பணிகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்படும். பொதுமக்களும், தங்கள் குறைகளை நேரடியாக அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம். இக்கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என, பொதுமக்களுக்கு, அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !