மேலும் செய்திகள்
இந்தியன் ரேஸிங் இன்று துவக்கம்
04-Oct-2025
மாட்டுவண்டி பந்தயம்
06-Sep-2025
போத்தனுார்: கோவையில் இரு நாட்கள் நடந்த தேசிய ரேஸிங் விழா - 2025 நேற்று நிறைவடைந்தது. செட்டிபாளையத்திலுள்ள கரி மோட்டார் ஸ்பீடு வேயில் நேற்று முன்தினம் துவங்கியது. இந்தியன் ரேஸிங் லீக்கின் முதல் பந்தயத்தில் பெங்களூரு, கிச்சாஸ் கிங்ஸ் அணியின் கைல்குமரன், நீல் ஜானி ஆகியோர் முதல் மற்றும் மூன்றாமிடத்தையும், இரண்டாமிடத்தை ஹைதரபாத் பிளாக் பேர்ட்ஸ் அணிபிடித்த து. ஜே கே டயர், எப்.எம்.எஸ்.சி.ஐ.யின் தேசிய பந்தய சாம்பியனுக்கான முதல் பந்தயத்தில் மெஹுல் அகர்வால். துருவ் கோஸ்வாமி, ஆதித்யா பட்நாயக் ஆகியோரும், இரண்டாம் பந்தயத்தில் , மெஹுல் அகர்வால், துருவ் கோஸ்வாமி, தில்ஜித் ஆகியோரும் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர். பார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் முதல் பந்தயத்தில் அகமதாபாத் அபெக்ஸ் ரேஸர்ஸ் அணியின் இட்சுகி சட்டோ, கொல்கட்டா ராயல் டைகர்ஸ் அணியின் காஸி மோதலேகர், டில்லி ஸ்பீடு டெமான்ஸ் அணியின் சாய்சிவசங்கரன் ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர். தொடர்ந்து நிறைவு நாளான நேற்று நடந்த இந்தியன் ரேஸிங் லீக் பந்தயத்தில் ரவுல் ஹைமன், சாஹன் அலி மோஷின், ருஹான் ஆல்வா ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர். பார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் இரண்டாம் பந்தயத்தில் ஷேன் சந்தாரியா, லுவிவேசம்புட்லா, இட்சுகி சட்டோ ஆகியோரும், மூன்றாம் பந்தயத்தில் இட்சுகி சட்டோ, லுவிவேசம்புட்லா, இஷான் மாதேஷ் ஆகியோரும், நான்காம் பந்தயத்தில் இஷான் மாதேஷ், சாய்சிவசங்கரன், ஷேன் சந்தாரியா ஆகியோரும் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
04-Oct-2025
06-Sep-2025