மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் பள்ளி கல்வி அமைச்சர் ஆய்வு
கோவை ; கோவை ராமநாதபுரத்தில் உள்ள மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் திடீர் ஆய்வு செய்தார். கோவை, அனுப்பர்பாளையத்தில் நுாலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்க முதல்வர் ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். விழாவில் பங்கேற்க வந்த பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ், ராமநாதபுரத்தில் உள்ள மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் திடீர் ஆய்வு செய்தார்.முதல்வரின் காலை உணவு திட்டத்தில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து பள்ளி குழந்தைகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, வகுப்பறைகளுக்கு சென்ற அவர் ஆசிரியர் பயிற்றுவித்தல் முறை குறித்து கேட்டறிந்ததுடன், மாணவ, மாணவியரிடம் வார்த்தைகள் உச்சரிப்பு, கையெழுத்து, ஆங்கில திறன் உள்ளிட்டவற்றை சோதனை செய்து, நன்கு பயிலுமாறு அறிவுரைகள் வழங்கினார்.